கரோனா சவால்: அமெரிக்காவில் இந்தியர்களின் நிலை என்ன? - ஆசிரியர் சீமா சிரோஹி
வாஷிங்டன்: உலகை உலுக்கும் கரோனா (கோவிட்-19) வைரஸ் சவாலை அமெரிக்கர்கள், அங்கு வசிக்கும் இந்தியர்கள், கல்வி பயிலும் ஆசிய மாணவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் நிவாரணங்கள் என்னனென்ன என்று விவரிக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் மூத்தப் பத்திரிகை ஆசிரியர் சீமா சிரோஹி.

கரோனா (கோவிட்-19) பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்குள்ள சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்தியச் சமூகம் உயர்ந்துள்ளது. எனினும், உள்ளூர் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானச் சேவை தடைபட்டுள்ளது. அனைத்து வகை போக்குவரத்துகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியச் சமூகம் மாறியுள்ளது. இந்திய, அமெரிக்க மருத்துவர்கள் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்குகின்றனர்.
ஹோட்டல் உரிமையாளர்கள் உணவு வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வீடு தேடி மளிகைப் பொருள்களை வழங்குகின்றனர். அமெரிக்காவின் 50 மாகாணங்களும் கரோனாவின் பிடியில் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க் கரோனாவின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரங்கள் மிகக் கடுமையானவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. இது ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள இந்திய-ஆசிய குடும்ப உறுப்பினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலைக்குப் பதிலளிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஒரே இரவில் தங்கள் விதிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், சுகாதார வழிகாட்டுதல்கள் பலர் கேட்கும் ’வெளியேற்றத்தை’ அனுமதிக்காது. கரோனா வைரஸ் தாக்கியுள்ள சில குடிமக்களுக்கு சிறப்பு வழங்கலையும் அனுமதிக்காது.
அந்த வகையில் வதந்திகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை நம்புவதற்குப் பதிலாக அமெரிக்க அரசாங்க வலைதளங்களில் தினசரி புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவது நல்லது. உண்மையில், வதந்தி எதுக்கும் உதவாது, கூடுதல் தலைவலியை மட்டுமே உருவாக்கும். இது ஒரு ட்விட்டர் கணக்கைத் திறந்து கவனத்தை ஈர்க்க புகார் செய்வதற்கு உதவாது. ஒருவரின் மகன் அல்லது மகள் விமானத்தில் செல்லப்பட வேண்டும் என்று ’தொகுதிகள்’ சார்பாகக் கடிதங்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் சுமையைச் சேர்ப்பது உதவாது.
தற்போது ஒரு வதந்தி வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமக்களை நாடு திரும்ப அழைத்து வரப் போகிறது என்று அந்தச் செய்தி நீள்கிறது. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை. அது வடிகட்டிய வதந்தி. ஏனெனில், அமெரிக்க தூதரகம் தனது சொந்த வளங்களையும், அமெரிக்க நிறுவனங்களையும் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை மீண்டும் கொண்டுவருவதற்காக ஏற்பாடு செய்து வருகிறது. ஆகவே உண்மைகளுடன் ஒட்டிக்கொள்வது சிறந்தது.
மற்றொரு விஷயம் இந்தியத் தூதரகம் குறைக்கப்பட்ட ஊழியர்களுடனும், ’மிகுந்த எச்சரிக்கையுடனும்’ செயல்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு அலுவலர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்கள் 'சமூக இடைவெளியைக் கவனிக்கவும், பணியாளர்களுக்கு தேவையற்ற ஆபத்தைத் தவிர்க்கவும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.
தூதரகம் மற்றும் அதன் ஐந்து தூதரகங்கள் நீட்டிக்கப்பட்டு வளர்ந்து வரும் சூழ்நிலையைச் சமாளிக்க முயற்சி செய்கின்றன. உதவி கேட்கும் இந்தியர்களுடனும், அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு ஏஜென்சிகளுடனும் அவர்கள் தொடர்பில் உள்ளனர். அதேபோல் ஹெச்.1 பி விசா வைத்திருக்கும் நபர்கள் சந்திக்கும் விசா காலம் குறித்த பிரச்னைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர். மற்ற அனைத்து தேசிய இனங்களும் ஒரே சிந்தனையில் உள்ளன. ஆகவே தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விசாக்கள் விஷயத்தில் மென்மையான போக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக இந்தியக் குடிமக்கள் ஒரு பதிவை உருவாக்க ஆன்லைனில் தங்கள் விசாக்களை நீட்டிக்க தாக்கல் செய்ய வேண்டும். பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் குறைந்தது ஒரு தங்குமிடத்தையாவது திறந்து வைத்துள்ளன. பல இந்திய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் அறைகளை வைத்திருக்கிறார்கள். இந்தியா சர்வதேச விமானங்களை நிறுத்துவதற்கு முன்பு பல இந்திய மாணவர்கள் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறினர்.
இந்தியா திரும்ப சிலர் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொண்டனர். ஏனெனில், இந்தியாவின் பணிநிறுத்தம் செய்யப்பட்ட நேரத்தை வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தவறாகப் புரிந்துகொண்டு சில பயணிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தற்போது பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கியிருக்கிறார்கள். கரோனா வைரஸ் பரவிய சில நாள்களில் இந்தியத் தூதரகம் உருவாக்கிய மாணவர்களுக்கான 24x7 ஹெல்ப்லைன் செயல்பட்டு வந்தது.
இதற்கு முதல் வாரத்திலேயே 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. விசா பிரச்னைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்துக்கும் மேற்ட்ட மாணவர்கள் பல்கலைகழகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசரக் கால மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆசிய, அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஹோட்டல் சங்கம் சார்பில், இந்திய மாணவர்களுக்கு இலவச அறைகளை வழங்குகிறார்கள்.
எனினும் அதன் வளாகங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. அங்குள்ள மாணவர்களுக்கு சிலர் உணவையும் வழங்குகிறார்கள். அமெரிக்கா மற்றும் இந்தியா உள்பட உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ள ஒரு நெருக்கடியில், ஒவ்வொருவரும் தங்களது பங்கை அளிக்க வேண்டும்!