கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா, "பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் இராணுவத் தளங்களை குறிவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் தோல்வியுற்றது. பாலகோட் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிப்பதுதான் நமது நோக்கமாக இருந்தது. இந்திய விமானப்படை தனது சிவில் போக்குவரத்தை எப்போதும் நிறுத்தாது.
நமது பொருளாதாரத்திற்கு வான்வழி போக்குவரத்து மிக முக்கியமானது. பாகிஸ்தான் வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது அவர்களின் பிரச்னை” என்றார்.