ETV Bharat / bharat

மும்பை வந்த கங்கனாவுக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு!

author img

By

Published : Sep 10, 2020, 12:58 PM IST

மும்பை : நடிகை கங்கனா ரணாவத்துக்கு 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

kang
kang

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ”மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணர்ந்தால், இங்கே வராதீர்கள்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் நான் மும்பை வருவேன் என கங்கனா சவால் விட்டதால், இரு தரப்பிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களா வீட்டில் சட்டவிரோதமாக புதுப்பித்தல் பணிகள் நடப்பதாகவும், எனவே உடனடியாக அதனை இடிக்கப் போவதாகவும் மும்பை மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஒட்டப்பட்டு ஒரே நாளில் அவரது வீட்டின் ஒரு பகுதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தனது வீட்டை இடிப்பதற்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் சமயத்திலே, அவசரமாக வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, மாநகராட்சியை இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இரு தரப்பிலும் அசாதாரண சூழல் நிலவுவதால், கங்கனாவிற்கு மத்திய அரசு சார்பில் ’ஒய் பிளஸ்‘ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து. எனவே, அதன்படி ஆயுதம் தாங்கிய கமாண்டோ வீரர்கள் கங்கனாவை பாதுகாப்பு வளையம் அமைத்து மும்பைக்கு அழைத்து வந்தனர். விமான நிலையத்தில் சிவசேனா கட்சியினர் கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து மும்பைக்கு வருவோர் கட்டயாமாக 14 தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய சூழலில், நடிகை கங்கனாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிப்பதாக மும்பை உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய மூத்த நிர்வாக அலுவலர் ஒருவர், "குறுகிய கால பயணத்திற்கு வந்துள்ளதால் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற அவர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். ஒரு வாரத்திற்கும் குறைவாக அவர் தங்குவதால், குறுகிய கால பார்வையாளர் பிரிவின் கீழ் கங்கனா பெயர் சேர்க்கப்பட்டு விலக்கு அளிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

கங்கனா வரும் செப்டம்பர் 14ஆம் தேதி மும்பையிலிருந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.