மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி போபால் ரோஷன்பூரில் உள்ள காந்தி சிலைக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறிகையில், ''மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமல்ல. அவர் உலகத்திற்கான தலைவர். அவரது கருத்துக்களை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக இந்தியராகிய நாம் பின்பற்றவில்லை என்றால் நாடும், நமது கலாச்சாரமும் அழிந்துவிடும்'' என்றார்.