இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பிராந்திய சிறப்பு வானிலை மையத் தலைவர் ராஜேந்திர குமார் ஜெனமணி, “நாடு முழுவதும் பல பகுதிகளில் மிகத் தீவிரமான வெப்பநிலை ஏற்பட்டுள்ளது. குஜராத், ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா பகுதிகளில் தொடர்ந்து கடுமையான வெப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலையை கடந்த 2 நாட்களில் 47.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதிகளில் கிழக்கு நோக்கி காற்று வீசத் தொடங்கும் என்பதால் மே 28ஆம் தேதி முதல் வெப்ப அலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் கிழக்கு நோக்கிய காற்று வீசுவதால் மே 29ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கும். மேலும், வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![India witnesses highest temperature of 2020 in last 2 days](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7340695_ina.jpg)
இந்திய மக்கள் தங்களை தொடர் வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால், நிலைமையை கையாள தயாராக இருக்கிறோம் - டெல்லி முதலமைச்சர்