இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில், "லடாக்கின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சீனா குறைத்து வருகிறது. ஆனால், சீனா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் கனரக ஆயுதங்களையும் விலக்கினால் மட்டுமே இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரும்" என்று கூறப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்திய-சீன எல்லை விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், நாட்டின் சுய மரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது எனவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : லடாக் எல்லைப் பிரச்னை : அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்திய, சீன ராணுவங்கள்