அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கிடையே மிக பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. அதுகுறித்து டாக்டர். மனோஜ் பந்த் (இந்திய சர்வதேச வர்த்தக நிறுவன இயக்குனர்) ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவர், தான் புரிந்து கொண்ட வகையில் இரு நாடுகளும் எரிசக்தி, பாதுகாப்புத்துறையில் இணைந்து செயல்படுகின்றன. கடந்தாண்டு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் உயர் மட்ட அலுவலர்களை சந்தித்து, இந்தியாவுக்கு மலிவு விலையில் எண்ணெய் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தியாவிடமிருந்து அதிகளவில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் பெட்ரோனெட் எல்.என்.ஜி நிறுவனம், லூசியானாவில் உள்ள டெல்லூரியன் ஐ.என்.சி நிறுவனத்துடன் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி , பெட்ரோனெட் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லுரியன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி திட்டங்களில் அந்தப் பணத்தை முதலீடு செய்யும். அதன் மூலம் ஆண்டுக்கு 5 டன் திரவ எரிவாயுவை(LIQUID GAS) பெற பெட்ரோனட் நிறுவனத்துக்கு உரிமம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்படிபட்ட சூழலில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமோ, சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தமோ ஏற்பட வாய்ப்பில்லை. அவரின் வருகை முற்றிலும் அரசியல்ரீதியிலானது. அமெரிக்க வர்த்தக துறை ஆலோசகர் ராபர்ட் லைட்தீசரின் ஆலோசனை இல்லாமல் பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாது.
குறிப்பாக அவர் டொனால்ட் டிரம்புடன் இந்தியாவுக்கு வரவில்லை. வர்த்தக பிரச்னைகள் காரணமாக கடந்தாண்டு இருநாடுகளுக்கிடையே உறவு சரிந்தாலும், தற்போது சீரடைந்து நல்ல பாதையில் போய் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஜி.எஸ்.பி அந்தஸ்த்து பறிக்கப்பட்டாலும், இரு நாடுகளுக்கிடையே கட்டண ஒப்பந்தங்களில் மோதலில்லை.
மேலும் 'இந்தியாவுடன் மிகப் பெரிய வத்தகம் மேற்கொள்ளப்படும், அது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக நடக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது' என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது வர்த்தக ஒப்பந்தம் தற்போது இல்லை என்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏவுகணைத் தாக்குதலிருந்து காக்கும் கருவி: 1200 கோடியில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்!