டெல்லி: பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கரோனா தொற்று காரணமாக, அந்நாட்டுடனான விமான சேவைக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை தடை விதித்தது.
இந்நிலையில், பிரிட்டன் உடனான விமான சேவை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களின் சேவைகள் வரும் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும். அதேபோல், பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான விமான சேவை வரும் 8ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்.
ஜனவரி 23ஆம் தேதி வரை, வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும். அந்நாட்டிற்கு செல்லும் விமானங்கள் 15, அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்கள் 15 என மொத்தம் 30 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. கரோனா சூழலை ஆய்வு செய்த பின்பு விமானங்களை அதிகரிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் தற்போது வரை 29 பேர் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்