இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, கரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க வெளியுறவுத் துறை முனைப்புக் காட்டிவருகிறது.
முதல்கட்டமாக சீனாவிடமிருந்து ஐந்தரை லட்சம் ரேபிட் கிட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பின்னர் இந்தியா முழுவதும் மாநில வாரியாக இந்த ரேபிட் கிட்கள் பிரித்து அளிக்கப்படும்.
இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் குறைவாக இருப்பதால் இங்கிலாந்து, மலேசியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்க வெளியுறவுத் துறை முயற்சிகளை எடுத்துவருகிறது.
மேலும் தென்கொரியாவிடமிருந்தும் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க இந்தியா ஆர்டர் செய்துள்ளது. விரைவில் இந்த மருத்துவ உபகரணங்களும் இந்தியா வந்தடையும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அறிவுரை தேவையில்லை: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி