கொரிய போர் நடைபெற்று இன்றோடு 70ஆவது ஆண்டு நிறைவடைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவிடும் வகையில் இப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இப்போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 60 மருத்துவர்கள் பங்கேற்றதாகவும், அமைதி நிலவிட பங்களித்த அவர்களால் இந்தியா பெருமை கொள்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "போரின் சாம்பலிலிருந்து எழுந்து சிறந்த நாட்டை உருவாக்கிய கொரிய மக்களுக்கு தலை வணங்குகிறேன். கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவிட இந்திய மக்களும் அரசும் தென் கொரியாவின் பக்கம் நிற்போம். அமைதி நிலவுவதற்காக அதிபர் மூன் ஜே இன் பல முயற்சிகளை செய்துவருகிறார். அதற்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
போரின்போது இந்திய ராணுவத்தை சேர்ந்த மருத்துவர்கள் அத்தியாவசிய மருந்துகளை ராணுவ வீரர்களுக்கும் மக்களுக்கும் அளித்து பெரும் பங்காற்றினர். ஜூன் 25ஆம் தேதி, 1950ஆம் ஆண்டு தென் கொரியா மீது வட கொரியா படை எடுத்தது. ஜூலை மாதம், 1950ஆம் ஆண்டு வரை நீடித்த இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: சீன எல்லையில் தயாராகும் சாலைகள்: அதிரடி காட்டும் இந்தியா