இது தொடர்பாக இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் ஷன் வெய்டோங்க், டெல்லியில் நேற்று (பிப். 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசுகையில், "சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இருவரிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், சீனாவின் தேவைகளை அறிந்து மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எந்த பரிந்துரையும் செய்யவில்லை. அதே வேளையில், மற்ற நாடுகள் விதித்த பயணம், வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகளையும் எதிர்க்கவில்லை. எனவே, கொராோனா பீதியை பெரிதுபடுத்தாமல் வழக்கம் போல பயணிகள் வந்து செல்லவும், வர்த்தக நடவடிக்கைகளை தொடரவும் உலக நாடுகள் முன்வர வேண்டும்.
கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த சீனாவின் மாகாணங்களில் வசித்த இந்தியர்கள் மீது செலுத்திய கவனம் மற்றும் மருத்துவ ரீதியிலான உதவிகள் போன்ற நடவடிக்கைகளை இந்தியா துரிதமாக மேற்கொண்டது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உரிய தகவல் பரிமாற்றங்கள் செய்துகொண்டன. இந்தியாவும் கொரோனா சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்ததால், சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருந்தது. எனவே, கொரோனோ வைரஸ் காரணமாக சீனாவுக்கு வர்த்தகம், சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம் ஜிஎஸ்டி - சுப்பிரமணியன் சுவாமி