ETV Bharat / bharat

ஐக்கிய பாதுகாப்பு கவுன்சில் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக ரஷியா!

author img

By

Published : Jan 15, 2020, 3:23 PM IST

டெல்லி: ரைசினோ உரையாடல் 2020 மாநாட்டில் கலந்துகொண்ட ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர இடமளிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது வளரும் நாடுகளுக்கு 'போதுமான பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

India should be part of UNSC: Russian FM Lavrov
India should be part of UNSC: Russian FM LavrovIndia should be part of UNSC: Russian FM Lavrov

தலைநகர் டெல்லியில் தொடங்கி நடந்துவரும் ரைசினா உரையாடல் 2020இல் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். அப்போது அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த விழாவில் செர்ஜி லாவ்ரோவ் தொடர்ந்து பேசியதாவது:

பிரிக்ஸ் தொடர்பான முடிவுகளுக்கு எந்தவொரு முக்கியத்துவத்தையும் ஜி7 நாடுகள் தீர்மானிக்க முடியாது. அது ஜி20 மாநாடாக இருக்க வேண்டும். இந்தியாவும் பிரேசிலும் முற்றிலும் யு.என்.எஸ்.சி.யில் இருக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு அங்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு லாவ்ரோவ், 'ரைசினா உரையாடல் 2020' இல் பேசினார்.

ரைசினா உரையாடல் 2020 என்பது பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும், வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும், ஒரு நூற்றாண்டுக்கு ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கும் உலகளாவிய முயற்சிகளுக்கு இந்தியா அளித்த பங்களிப்பின் விளைவாகும்.

ரைசினா உரையாடல் 2020 மூன்று நாள் மாநாடு 700 சர்வதேச பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கிறது. இதில் 40 விழுக்காடு பேச்சாளர்கள் பெண்களாக இருப்பார்கள். இது பாலின சமத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: ஈரான் விமான விபத்து: வீடியோ எடுத்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.