கரோனாவுக்கு பின் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சாலை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் பெரும்பாலான நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. இப்போது தான் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புள்ளது. உலகளவில் பெட்ரோலிய எரிபொருளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் மலிவான மாற்று ஏரிபொருள் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். எனவே, இச்சமயம் தான் மின்சார வாகனங்களுக்கு நல்ல வாய்ப்பு.
தனியார், பொது முதலீடு மூலம் சிறப்பாக செயல்படும் பொது போக்குவரத்தின் லண்டன் மாதிரி அணுகுமுறையை கடைப்பிடித்தால் ஏழை பயணிகளுக்கும் குடிமை நிர்வாகத்திற்கும் பயனளிக்கும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கும்" என்றார்.