இதுகுறித்து அவர் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நம்முடைய நிதித்திறன் கூடியுள்ளது. ஆகவே, நிதிசார் வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.
மேலும், மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளதாகவும், இதன்மூலம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தன்மேம்பாட்டுக்கு உதவியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.