வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸிடம் வங்கதேச அரசு மேற்கொண்ட விசாரணையில் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது என தெரியவந்தது. ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு வலியுறுத்தியது.
வங்கதேசம் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து தேசியப் புலனாய்வு முகமை இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடைசெய்தது. தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும், போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றம்சாட்டியது.
அப்போது, வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என அஞ்சி மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்த, அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் நிரந்தர வசிப்பிட குடியுரிமையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிற்கு அரசாங்கம் முறையான கோரிக்கையை இன்று அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு, ரஷ்யாவில் நடந்த 5ஆவது கிழக்கு நாடுகளின் பொருளாதார சந்திப்பில் மலேசிய தலைவர் மகாதீர் மொஹமட்டை சந்தித்தபோது, நாயக் குறித்து பேசியதாக அறிய முடிந்தது. இதையடுத்து, தற்போது அரசு அதிகாரப்பூர்வமாக இந்த ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவற்றை கூறி இவரை இந்தியாவிற்கு கொண்டு வர, மத்திய அரசு இண்டர் போல் உதவியை நாடியது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தென் கொரியாவுக்கு ஸ்டைரீனை அனுப்பும் எல்.ஜி. பாலிமர்ஸ்