2016இல் இஸ்லாமாபாத் சார்க் உச்சி மாநாட்டினை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்த போது, யுஆர்ஐ பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் தலைமையிலான ஒரு கூட்டுப் புறக்கணிப்பை அது கண்டது. அப்போதிலிருந்து ஸ்ரீலங்கா, நேபாளம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகள் மிக உயர்ந்த அரசியல் மட்ட உரையாடல் நிகழ்வினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாடுகையில் இந்தியாவானது அவ்வாறு நடத்துமளவிற்குச் சூழ்நிலை உகந்ததாக இல்லை என்றும் மற்றும், பாகிஸ்தான் அதின் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும் என்பதும் போன்ற நிலைப்பாட்டினைத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், இந்தியா, கோவிட்-19 தொற்றுநோயினைச் சமாளிக்க வேண்டி தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலகளாவிய பொது சுகாதார சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டுப் பிராந்திய உத்திகளை எதிர்பார்த்து இன்று பிரதமர் மோடி மீண்டும் சார்க் மீது கவனத்தைத் திருப்புகிறார்.
சார்க் நாடுகளின் தலைமையானது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான மூலோபாயத்தை வரையறுக்க நான் முன்மொழிகிறேன் என்றும், எங்கள் குடிமக்களை ஒரு ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க காணொளி உரையாடல் வழியாக அதற்கான வழிகளை கலந்தாலோசிக்க முடியும் என்றும், ஒன்றாக நாம் உலகிற்கு ஒருமுன்மாதிரியினை வைத்து ஆரோக்கியமான ஒரு கிரகத்திற்குப் பங்களிக்கலாம் என்றும் இன்றைய ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டிருக்கிறார்.
(https://twitter.com/narendramodi/status/1238371182094639104?s=21 )
வெளிவிவகார அமைச்சக ஆதாரங்களின்படி, பிரதமர் ட்வீட்டரில் முன்மொழிந்துள்ளது போல காணொளி காட்சி உரையாடலுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த யோசனையானது பிராந்தியத் தலைவர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான முயற்சியில் முன்முயற்சி எடுத்தமைக்கு PM@narendramodi அவர்களுக்கு நன்றி. கோவிட்-19 ஐ தோற்கடிக்க கூட்டு முயற்சி தேவையாகும். மாலத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் அவர்கள், இந்தத் திட்டத்தை மாலத்தீவுகள் வரவேற்கிறது என்றும் அத்தகைய பிராந்திய முயற்சிகளை மாலத்தீவுகள் முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவரது பதிலில் அவர் எழுதியுள்ளார். (https://twitter.com/ibusolih/status/1238399680158916608?s=21). " மேலும், திரு நரேந்திரமோடி அவர்களே உங்களது மேலான முயற்சிகளுக்கு நன்றி என்றும், ஸ்ரீலங்காவானது, கலந்துரையாடலில் சேர்ந்துகொள்ளவும், அவர்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளவும், மற்றும் பிற சார்க் உறுப்பினர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது என்றும், மற்றும் இக்கடினமானத் தருணங்களில் நாம் நமது குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒற்றுமையாக ஒன்றிணைவோமாக என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்சே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
(https://twitter.com/gotabayar/status/1238395428019683328?s=21)
இந்த ஆண்டு, தற்செயலாக, ஒரு இலங்கை இராஜதந்திரியானவர் சார்க் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். ஆனால், கொழும்புடனான சமீபத்திய அதிகாரப் பூர்வப் பேச்சிவார்த்தைகளில், குழுவினைப் புதுப்பிக்க இந்தியா எந்த ஒரு உத்வேகத்தையும் காட்டவில்லை.
நவம்பர் 2014 இல் காத்மண்டுவில் நடந்த சார்க் உச்சி மாநாட்டின்போது முன்னேறிச் செல்வதற்காகத் துணைப் பிராந்தியவாதத்தின் தேவையினை வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் BIMSTEC ஐ மேலும் முனைப்புடன் ஒரு மாற்றுப் பிராந்தியமாக முன்னிறுத்துகிறார்.
பலதுறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அல்லது BIMSTEC என்பது, தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர அனைத்து சார்க் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் போன்ற ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்.
பாகிஸ்தானிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்கதேசம், நேபால் மற்றும் பூட்டான் நாடுகளானது மோடியின் முன்மொழிதலை வரவேற்றுள்ளது. "சார்க் நாடுகளின் தலைமையானது கொரோனா வைரைஸை எதிர்த்துப் போராட ஒரு வலிமையான யுக்தியினை வரையறுக்க வேண்டும் என்ற ஆலோசனையை பிரதம மந்திரி மோடிஜி அவர்கள் முன்மொழிவதை நான் வரவேற்கிறேன் என்றும், எங்கள் குடிமக்களை இந்தக் கொடிய நோயினின்று பாதுகாக்கப்பட சார்க் உறுப்பு மாநிலங்களுடன் எனது அரசு நெருங்கிப் பணி புரியத் தயாராக உள்ளது" என்றும் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
(https://twitter.com/pm_nepal/status/1238401865370361857?s=21)
இதனையே தலைமைத்துவம் என்று நாம் அழைக்கிறோம். இதுபோன்ற தருணங்களில் நாம் இப்பிராந்தியத்தின் அங்கத்தினர்களாக ஒன்று சேர வேண்டும். சிறு பொருளாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் ஒருங்கிணைய வேண்டும். உங்களது தலைமைத்துவத்துடன், நாங்கள் பயனுள்ள மற்றும் உடனடி பலனைக் காண்போம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்றும், காணொளி கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் பூட்டானியப் பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
(https://twitter.com/pmbhutan/status/1238395565571883009?s=2)
பிரதமர் ஷேக் ஹசீனா முன்மொழிவினை வரவேற்பதுடன், இச்சோதனையான நேரத்தில் பிராந்தியமும் உலகமும் முன்னோக்கிச் செல்வதற்கான வழியினை கலந்தாலோசிக்க ஒப்புக்கொண்டிருக்கும் நரேந்திரமோடி, இப்ராஹிம் சோலிஹ், நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர், கோத்தபய ராஜபக்சே மற்றும் மாநிலங்களின் தலைவர்கள் போன்றவர்களுடன் ஒரு கட்டமைப்பான உரையாடலை எதிர்நோக்கியிருப்பதாக வங்கதேச இளநிலை வெளித்துறை அமைச்சர் முகமது ஷஹ்ரிஆர் ஆலம் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
(https://twitter.com/mdshahriaralam/status/1238452738683359235?s=21)
ஒருமித்தக் கருத்திற்கு வேலை செய்யும் சார்க் சாசனம், பாகிஸ்தான் தான் நடத்த உள்ள உரையாடலுக்கான உரிமையை விட்டுக்கொடுத்தால் மட்டுமே, அடுத்த உச்சி மாநாடு நடக்க உள்ள இடத்தில் மாற்றத்தினை அனுமதிக்க முடியும்.
கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட, இந்திய அரசாங்கமானது எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், உள்துறை, குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து விளக்கும் ஒரு கூட்டு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள 130 க்கும் மேலான நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தூதுக்குழுவின் 100 தலைவர்கள் வந்திருக்கும் இன்றைய தினத்தன்று பிரதமர் மோடியின் ட்வீட்டானது ஒரு தொகுக்கப்பெற்ற பிரதியுத்திரத்திற்கான தேவையினை வலியுறுத்துகிறது.
ஆராய்ச்சி நிறுவனக் கண்காணிப்பின் தலைவர் சமீர் சாரன், பிரதம மந்திரி மோடியின் சார்க் முன்மொழிதலை வரவேற்று தனது ட்விட்டரில் அதைக் குறித்து "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஸ்திரமானது, விநியோக பிரிவின் கட்டுப்பாடுகள் மற்றும் அனுபவ பகிர்தல் போன்றவைகள் பிரயோஜனமானவை என்றும், எல்லையினை அடுத்துள்ள சமூகங்களுக்கு பிரிவினை கட்டுப்பாடில்லா அணுகுமுறையும் தேவை – கொரோனா எழுச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, உலகமெங்கிலும், பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய கூட்டு வழிகளைக் கண்டு பிடிக்க சார்க் அமைப்பில் உள்ள அரசியல் வேறுபாடுகளை இணைக்கும் பாலமாக ஒரு மனிதாபிமான அணுகுமுறையானது இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கொரோனா: இந்தியாவுக்குள் நுழைய தடை!