ETV Bharat / bharat

அயோத்தி விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்து கண்டிக்கத்தக்கது - இந்திய வெளியுறவுத்துறை

author img

By

Published : Nov 10, 2019, 11:08 AM IST

டெல்லி: அயோத்தி வழக்கு விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்துகளை நிராகரித்துள்ள இந்தியா வெளியுறவுத்துறை, உள்நாட்டு விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிக்கும் விதமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டது கண்டிக்கதக்கது என்றும் கூறியுள்ளது.

India rejects Pak's statement on Ayodhya verdict

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நேற்று வெளியிட்டது. இந்தத் தீர்ப்பை விமர்சித்து, பாகிஸ்தான் வெளியுறவு செயலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நீதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும், “வரலாற்று சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ளோம். இந்த முடிவு, மீண்டும் நீதிக்கான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சூழலில் மனித உரிமைகள் மனுக்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த பதில் கடுமையாக இல்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதேபோல் இந்த முடிவும் ஆகிவிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் இந்த அறிக்கையை இந்திய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “இந்தியாவிலுள்ள ஒரு சிவில் விவகாரத்தில் பாகிஸ்தானின் இந்த நன்றியற்ற கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முற்றிலும் எங்கள் உள்நாட்டு விவகாரம். அனைவருக்கும் சட்டம் பொதுவானது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு புரிதல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றாலும் எங்களின் உள்நாட்டு விவகாரம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் அவர்களின் உள்நோக்கம் கண்டிக்கதக்கது” என்றார்.

இதையும் படிங்க: ‘மதம், தெய்வத்தின் பெயரில் இனி ஒரு சொட்டு ரத்தம் சிந்தக்கூடாது’ - தா. பாண்டியன்

Intro:Body:

sd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.