இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்டது. அதன்படி இன்று (ஜன.16) ஒரே நாளில் 15,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,05,42,841ஐ கடந்தது.
சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,01,79,715ஆக உள்ளது. இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த விழுக்காடு 96.56ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 175ஆக உள்ளது. இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,52,093ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் விழுக்காடு 1.44ஆக உள்ளது.
இந்தியாவில், ஆகஸ்ட் 7 அன்று 20 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சமாக தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி 50 லட்சமாகவும், 16ஆம் தேதி 50 லட்சமாகவும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்படி ஜனவரி 15ஆம் தேதி வரை 8,57,65,491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதையும் படிங்க... நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்