இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா ஆராய்ச்சி கழகத்தின் தொற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் ஆர் கங்காகேத்கர் கூறுகையில், சீனாவிலிருந்து 5 லட்சம் கோவிட்-19 துரித பரிசோதனை கருவிகளை இந்தியா பெற்றுள்ளது.
வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பார்ட்ஸ் குறைகிறது அல்லது அதிகரிக்கிறது என்பதைக் கண்காணிக்க இந்தக் கருவிகள் உதவும். மற்றபடி ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிசெய்ய இந்த கருவிகள் உதவாது. எனவே இவற்றில் சில பழுதடைந்திருந்தாலும் அதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி குறித்தே நாம் கவலைகொள்ள வேண்டும்.
நாட்டில் இதுவரை இரண்டு லட்சத்து 90 ஆயிரத்து 401 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் முப்பதாயிரத்து 43 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
இதில், 23 ஆயிரத்து 331 மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திலும், மூன்றாயிரத்து 712 மாதிரிகள் தனியார் பரிசோதனைக் கூடங்களிலும் பரிசோதிக்கப்பட்டன.
ஒரு ஷிப்டில் ஒரு நாளைக்கு 42 ஆயிரத்து 400 மாதிரிகளைப் பரிசோதிக்கலாம். அதுவே, இரண்டு ஷிப்டில் வேலைசெய்தால் 78 ஆயிரத்து 200 மாருதிகளைத் தினமும் பரிசோதிக்கத் திறன் கொண்டுள்ளோம்" என்றார்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் இதுவரை இந்தியாவில் 12 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 414 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : கரோனா கண்டத்தை கடந்து விரைவில் அமெரிக்கா திறக்கப்படும்: ட்ரம்ப் உறுதி