ETV Bharat / bharat

15 நாடுகளுடனான சர்வதேச தபால் சேவை முன்பதிவு தொடக்கம் - ரவி சங்கர் பிரசாத் - மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

டெல்லி: 15 நாடுகளுடனான சர்வதேச தபால் சேவைகளுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்
author img

By

Published : May 22, 2020, 1:29 PM IST

இந்திய தபால் துறையானது 15 வெளிநாடுகளுக்கான சர்வதேச விரைவுத் தபால், சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவைகள் (International tracked packet services) ஆகியவைகளுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஊரடங்கின் மத்தியிலும் தபால் துறை இயங்கி வரும் 15 நாடுகளுக்கு இந்தச் சேவையை மீண்டும் வழங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.

  • .@IndiaPostOffice resumes booking for Int’l Speed Post to 15 countries & Int’l Tracked Packet services to already available destinations.
    Delivery timelines will depend on the aviation services amidst pandemic #Covid19

    Booking for other Int’l Parcel n Letters remain suspended.

    — Ravi Shankar Prasad (@rsprasad) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், விமான சேவைகளைப் பொறுத்து இந்த 15 நாடுகளுக்கான தபால்சேவையின் கால அளவு மாறுபடும் என்றும், இதர சர்வதேச நாடுகளுக்கான பார்சல்கள், கடிதங்களுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளுக்கான தபால் சேவைகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 'இந்தியாவை மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்யும் மையமாக மாற்றுவதே நோக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.