தபால் நிலையங்களில் ஆர்.டி. கணக்கு வைத்திருப்பவர்கள் கரோனா ஊரடங்கினால் தவணைத்தொகையைச் செலுத்த முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ஆர்.டி. கணக்கு வைத்திருப்பவர்களுக்காக இந்திய அஞ்சல்துறை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “ஆர்.டி கணக்கு வைத்திருப்பவர்கள் கரோனா ஊரடங்கினால் செலுத்த இயலாத தவணைத் தொகையை ஜூன் 30-க்குள் செலுத்தலாம்.
அவ்வாறு காலதாமதமாக செலுத்தும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படது. மேலும், தள்ளுபடியின் பயனைப் பெற முன்கூட்டியே தவணைகளைச் செலுத்த இயலாத ஆர்.டி கணக்கின் சந்தாதாரர்கள், ஜூன் 30-க்குள் தொகையைச் செலுத்தினால் தள்ளுபடியின் பயனைப் பெறமுடியும்.
தற்போதுள்ள விதிப்படி கணக்கு நீட்டிக்கப்பட வேண்டுமானால், ஜூன் 30 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள மாதத் தவணைகளைச் சமர்ப்பிக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.