ETV Bharat / bharat

உயர் ரக வெடிகுண்டுகளை வாங்க மத்திய அரசு திட்டம் - உயர் ரக வெடிகுண்டுகளை வாங்க மத்திய அரசு திட்டம்

டெல்லி : பாகிஸ்தானுக்கு எதிரான பாலகோட் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட உயர் ரக வெடிகுண்டுகளை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

வெடிகுண்டு
வெடிகுண்டு
author img

By

Published : Jun 30, 2020, 9:25 PM IST

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, இந்திய - சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக Spice-2000 வெடிகுண்டுகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, பாலகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக Spice-2000 ரக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அவசர நிதி அதிகாரத்தின் மூலம், 500 கோடி ரூபாய் மதிப்புக்கு குறைவான ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், "இந்திய விமானப் படையிடம் Spice-2000 ரக வெடிகுண்டுகள் ஏற்கனவே இருப்பு உள்ளது. அவசர ஆயுதக் கொள்முதல் அதிகாரத்தின் மூலம், மேலும் அதிக எண்ணிக்கையில் Spice-2000 ரக வெடிகுண்டுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

70 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளைக்கூட Spice-2000 ரக வெடிகுண்டுகள் தாக்கி அழிக்கும். இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாறுதல்கள் மூலம் பதுங்குக் குழிகள், கடினமான கூடாரங்களை ஆகியவற்றையும் தாக்கி அழிக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஊரி, பாலகோட் விமானப்படை தாக்குதலைத் தொடர்ந்து, இம்மாதிரியான சிறப்பு அதிகாரம் பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து வெடிகுண்டுகளை வாங்க ராணுவம், கடற்படை ஆகியவை திட்டமிட்டு வருகின்றன.

இதையும் படிங்க: சீனப் பிரச்னை, கரோனா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தாருங்கள் - மத்திய அரசுக்கு சிவசேனா கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.