45 ஆண்டுகளுக்குப்பின் ராணுவ வீரர்களின் உயிரிழப்பை ஏற்படுத்திய லடாக் தாக்குதலுக்குப்பின், இந்தியா - சீனா இடையே நடைபெற்றுவரும் மோதல் போக்கு மெல்ல சீர்செய்யப்பட்டுவரும் நிலையில், இந்திய தற்போது சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க திட்டமிட்டுவருகிறது.
புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம் இதற்கான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் உள்ளூர் கல்வி நிறுவனங்களிடம் சீனாவின் கான்பூசியல் கல்வி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சகம் ஆய்வு நடத்தவுள்ளது.
இந்த கான்பூசியஸ் கல்வி நிறுவனம் சீனாவின் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் துணையுடன் சீனாவின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை குறித்த பாடங்களை சர்வதேச நாடுகளுக்கு வழங்குகிறது.
ஹன்பன் எனக் கூறப்படும் இந்த கான்பூசியஸ் கல்வி நிறுவனம் 2004ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், இந்த கல்விநிறுவனம் சர்வதேச நிறுவனங்களுடன் இனைந்து நடத்தும் இந்த செயல்பாட்டில் நிதித் தேவையை இரு கல்வி நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளும்.
இந்த நிறுவனம் இயங்கும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தலைக்க வைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக சில காலமாகவே புகார்கள் எழுந்துவருகின்றன. பிரான்ஸின் ஆலைன்ஸ் நிறுவனம், ஜெர்மனியின் கோத்தே கல்விநிறுவனங்களின் தோற்றத்தில் இயங்கிவரும் கான்பூசியஸ் நிறுவனம், அடிப்படையில் ஒரு வேறுபாட்டைக் கொண்டுள்ளது. அலையன்ஸ், கோத்தே நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், கான்பூசியஸ் நிறுவனம் சீன அரசின் நிதியின் கீழ் இயங்கிவருகிறது.
தனது எதிரி நாடுகளின் மீதான ராஜரீக உறவில் சீனா ஷார்ஃப் பவர் என்ற யுக்தியைப் பயன்படுத்திவருகிறது. எதிர் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தி அந்நாட்டின் அரசியல் சூழலை சீர்குலைக்கும் நோக்கத்தை இந்த யுக்தியைக் கொண்டு சீனா செயலாற்றிவருகிறது.
எனவே, சீனாவின் கான்பூசியஸ் கல்வி நிறுவனம் இந்திய கல்வி நிறுவனங்களுடன் செயல்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீண்டும் ஆய்வு செய்ய இந்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஜெ.என்.யு. பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கல்விப் பிரிவின் இயக்குனர் பி.ஆர்.தீபக் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், கடந்த 2005ஆம் ஆண்டு கான்பூசியஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்குப்பின் காலாவதியாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் ஸ்காலர்சிப் முறையில் பாடங்களை வழங்கும் சீனா ஆங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகிறது. இந்த ஷார்ஃப் பவர் யுக்தியை இந்தியா தடுக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும் தகவல்களின்படி, மும்பை பல்கலைக்கழகம், வி.ஐ.டி பல்கலைக்கழகம், லவ்லி ப்ரோபஸ்னல் பல்கலைக்கழகம், ஓ.பி. ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம், ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜ், பாரதியார் பல்கலைக்கழகம், கே.ஆர் மங்களம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்!