பாகிஸ்தான் நாட்டின் போர் விமானங்களும், கடற்படை விமானங்களும் 'ஹை மார்க்' என்ற பெயரில் இரவு நேரத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியானது பாகிஸ்தான் எல்லைக்குள் நடைபெற்றுவருகிறது. மேலும், இந்த வான்வழி பயிற்சிகள் குறித்து பாகிஸ்தான் விமானப் படை சார்பில் நோட்டீஸ் ஒன்றும் மத்திய அரசிற்கு அனுப்பபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், பாகிஸ்தான் ஜெட் விமானங்கள், சீன ஜே.எஃப்.-17, எஃப்-16, மிராஜ்-3 உள்ளிட்ட போர் விமானங்கள் இரவு நேரம் பறப்பது உள்பட பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருவதால், இந்திய விமானப் படையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப் படை நடத்திய பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் போலவே இரவு நேரத் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாப்பது போன்ற பயிற்சிகளை பாகிஸ்தான் விமானப் படை மேற்கொண்டுவருகிறது. பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் நேற்றிரவு கராச்சி நகரில் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.