மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க நாட்டில் மொத்த மருந்து உற்பத்தி பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டம் இந்தியாவின் சுய சார்புக்கு ஊக்கமளிக்கும்.
மாநில அரசுகளால் ஊக்குவிக்கப்படும் மொத்த மருந்து தொழில் பூங்காவில் பொது மருத்துவ வசதியை உருவாக்க 100 கோடி ரூபாய் வரை வழங்க ஒரு திட்டத்தை மருந்துத் துறை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு மருந்துத் துறை கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
மேலும், பொது மருத்துவ வசதியை உருவாக்க அந்நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகால அவகாசத்தையும் இந்தத் துறை கொடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள மருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு மருந்துகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2018-19ஆம் ஆண்டில் இந்தியா 2,405.42 மில்லியன் டாலர் மதிப்புள்ள (67.95 விழுக்காடு) மருந்துகளை சீனாவிலுள்ள மருந்து இடைத்தரகர்களிடமிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிபிஇ உடையில் 8 மணி நேரம் பணி' - சிரமங்களை விவரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்