தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த மாபெரும் பேரணியை நடத்த மேற்கு வங்கம் கொல்கத்தாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்றார். அப்போது, தேசிய பாதுகாப்பு படையின் புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "நாடு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது, பிரதமர் மோடியின் கீழ் துரிதமான பாதுகாப்பு கொள்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது" என்றார்.
வரும் 2021ஆம் ஆண்டு, மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கான வியூகங்களை அமித் ஷா இந்த பயணத்தின்போது அமைப்பார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு