ETV Bharat / bharat

'அவர் போன்று ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணருகிறது' - மன்மோகனுக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து! - ராகுல் காந்தி

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்தி ராகுல் காந்தி ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில், மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு உணருவதாக குறிப்பிட்ட ராகுல், 'அவரது நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது' எனப் பெருமிதத்துடன் கூறினார்.

India feels absence of a PM with depth of Manmohan

author img

By

Published : Sep 26, 2020, 2:37 PM IST

Updated : Sep 26, 2020, 3:02 PM IST

டெல்லி: 'மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடுஉணருகிறது' என்று அவரது பிறந்தநாளான இன்று (செப். 26) வாழ்த்து தெரிவிக்கையில் ராகுல் காந்தி ட்விட்டரில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இன்று தனது 88ஆவது வயதை எட்டியுள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக ராகுல் தனது ட்விட்டரில், "மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணருகிறது. அவரின் நேர்மை, கண்ணியம், அர்ப்பணிப்பு உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது.

அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு அவருக்கு இனிமையானதாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்ததோடு, 'HappyBirthdayDrMMSingh' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

  • India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.

    Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு உள்ள ஒரு தலைவனின் முதன்மையான நோக்கம் எப்போதும் சமுதாயத்தை விரைவாகவும் உறுதியாகவும் பாதிக்கும் தீமைகளை ஒழிப்பதே.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நல்வாழ்விற்கான, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உறுதிப்பாட்டை நாம் இன்று கொண்டாடுகிறோம்" எனக் கூறியுள்ளது.

மற்றொரு ட்வீட்டில் காங்கிரஸ், "தனது மகத்துவமிக்க பயணத்தில், அவர் பில்லியன் கணக்கான மக்களை அழைத்துச் சென்றார். மிகவும் போட்டி நிறைந்த உலகத் தலைவர்களின் ஒருவரான மன்மோகன் சிங்கின் பார்வை 'நமது நாடு சமரசமற்றது' என்பதே.

பெருமைமிகு மகனை உயர்வாகவும், குறைவாகவும் நடத்தியதற்கு இந்த நாடு அவருக்கு கடன்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Sep 26, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.