பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு உயர் அலுவலர்கள் இந்திய சட்ட அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த இரு அலுவலர்களும் ஞாயிற்றுக்கிழமை (மே31) கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த இரு அதிகாரிகளும் தங்கள் அந்தஸ்துடன் பொருந்தாத செயல்களில் ஈடுபட்டனர். இவர்களை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பாகிஸ்தான் அலுவலர்களும் கைது செய்யப்படும்போது என்ன செய்தார்கள்? அவர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பன போன்ற தகவல்கள் அறிக்கையில் சரியாக குறிப்பிடப்படவில்லை.
எனினும், “இந்த அலுவலர்களின் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக ஒரு வலுவான போராட்டம் நடத்தப்பட்டது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், “இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அவர்களின் ராஜதந்திர அந்தஸ்து பணிக்கு பொருந்தாத வகையில் நடக்கக் கூடாது” என்பதையும் அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உயர் அலுவலர்களை வெளியேற்றும் போது, உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கமாக குற்றஞ்சாட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’