ETV Bharat / bharat

சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் செய்ய புதிதாக 12 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி! - Corona virus

கரோனா வைரஸ் காரணமாக மக்களுக்கு தேவையான முகக்கவசங்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றுக்கு அதீத தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் செய்ய புதிதாக 12 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

india-expands-its-capacity-for-ppe-kits-12-domestic-firms-meet-the-norms

author img

By

Published : Mar 31, 2020, 9:22 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸால் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணித்தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அளவிட முடியாத அளவிற்கு மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும், மக்களுக்கு தற்போதைய தேவையான முகக்கவசம் ஆகியவையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு இந்தியாவைச் சேர்ந்த 12 தனியார் தொழிற்சாலைகளை அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பாதுகாப்பு உபகரணங்களில் முகக்கவசம், கண் கவசம், காலணி கவசம், கையுறை ஆகியவை அடங்கும். இந்தியாவைச் சேர்ந்த இந்த 12 தொழிற்சாலைகளும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் தரசோதனையில் தேர்ச்சிப்பெற்றுள்ளன.

இந்த 12 தொழிற்சாலைகள் பற்றி மத்திய அரசு அலுவலர் பேசுகையில், '' சாய் சினர்ஜி, சோர் சேஃப்டி, அமரலீஸ், எஸ்சிஜி எண்டெர்பிரைசஸ், ஸ்ரீ ஹெல்த் கேர், அனிருட் இண்டஸ்ட்ரீஸ் என பல தொழிற்சாலைகள் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்யவுள்ளனர்.

இவர்கள் சிங்கப்பூரிலிருந்து உற்பத்தியாளர்களுடன் தொடர்புகொண்டு 20 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களும், கொரியாவைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து 20 லட்சம் கருவிகளையும் உடனடியாக செய்யவுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை, மூன்று லட்சத்து 34 ஆயிரத்து பாதுகாப்பு உபகரணங்கள் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளன.

ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் மூன்று லட்சம் பாதுகாப்புக் கருவிகள் வரவுள்ளன. மும்பையில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளுக்கு என் மாஸ்க் (N - Mask ) உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் 12,000 N95 போலி உயர் ரக முகக்கவசங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.