நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நாளுக்குநாள் அதிகமாகப் பரவிவருகிறது. அதனால், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கரோனா இறப்பு விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.
வல்லரசு நாடுகளே இந்தக் கரோனாவால் விழிபிதுங்கியுள்ள நிலையில் இந்தியா சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாட்டில் கரோனா கண்டறிதல் சோதனை வேகமெடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது மில்லியனில் மைல்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த 21 நாள்களில் குணமடைவோர் 100 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’காண்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு கரோனாவால் அதிக ஆபத்து’