இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய அச்சுறுத்தலான கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 45 ஆயிரத்து 209 பேர் புதிதாக பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து 12ஆவது நாளாக 5 லட்சத்துக்கும் கீழ் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கைப் பதிவாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 501பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 227ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு விகிதம் 1.46விழுக்காடாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள கரோனா தொற்றாளர்களில் 93.69 விழுக்காட்டினர் இதுவரை அதன் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையைவிட நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. தற்போது, இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, இதுவரை கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 90 லட்சத்து 95 ஆயிரத்து 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மருந்துவமனைகளில் நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 962 பேர் (4.85%) சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 85 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் இதுவரை அதன் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்திய அரசின் தொடர்ச்சியான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தொடர் சரிவுக்கு பங்களித்திருக்கிறது. வீடு வீடாக கணக்கெடுப்பு, சுற்றளவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சரியான நேரத்தில் உதவிகளை வழங்குவது, கட்டுப்பாட்டு மண்டலங்களின் கண்காணிப்பு, நோயறிதல், பராமரிப்பு நெறிமுறை, மருத்துவ மேலாண்மை ஆகியவை காரணமாக தொற்று எண்ணிக்கை குறைவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
13.17 கோடியே பேரிடம் கரோனா வைரஸ் கண்டறிதல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது. அதில், 10 லட்சத்து 75 ஆயிரத்து 326 பேரிடம் நேற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதையும் படிங்க:ஊரடங்கால் மாற்றம் கண்ட மனித நடத்தைகளால் காற்று மாசு குறைந்தது - நாசா தகவல்!