ETV Bharat / bharat

இந்தியாவில் 85 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 லட்சத்து 7 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

cor
or
author img

By

Published : Nov 8, 2020, 1:02 PM IST

Updated : Nov 8, 2020, 1:27 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தைத் தாண்டுகிறது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 674 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி 559 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 லட்சத்து 7 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 121ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 78 லட்சத்து 68 ஆயிரத்து 968ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா
கரோனா அப்டேட்

அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 8 லட்சத்து 44 ஆயிரமாக உள்ளது.

இதுவரை மொத்தமாக 11 கோடியே 77 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று(நவ.07) மட்டும் சுமார் 11 லட்சத்து 94 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, பத்தாவது நாளாக 6 லட்சத்துக்கும்கீழ் பதிவாகியுள்ளது. தற்போது, 5 லட்சத்து 12 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 8, 2020, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.