ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா நிலவரம்: 72,049 பேருக்கு பாதிப்பு, 986 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 72 ஆயிரத்து 49 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India COVID-19
India COVID-19
author img

By

Published : Oct 7, 2020, 11:11 AM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 72 ஆயிரத்து 049 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 986 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 67 லட்சத்து 57 ஆயிரத்து 131 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 7 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 57 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து நாலாயிரத்து 555 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 99 ஆயிரத்து 857 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 8 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரத்து 654 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2020 நோபல் பரிசு: இயற்பியல் துறையில் மூவருக்கு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.