இந்தியாவில் கரோனா பாதிப்புகள் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இதுவரை 6 ஆயிரத்து 184 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 892ஆக உள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதித்தவர்களில் 22.17 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 381 நோயாளிகள் குணமடைந்ததாக தெரிவித்த அவர், 20 ஆயிரத்து 835 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். கரோனா குறித்த தவறான தகவலை மக்கள் பரப்பக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர், கரோனா பரவலுக்கு எந்த சமூகத்தையும் குற்றம்சாட்டக்கூடாது என்றும் குணமடைந்தவர்களிடமிருந்து கரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ வாய்ப்புள்ளவர்கள் என்பதை கூறிய அவர், கடந்த 14 நாள்களில் கரோனா பாதிப்பு ஏற்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஜனவரியில் நாளொன்றுக்கு 205 வழக்குகள், ஏப்ரலில் மொத்தமாகவே 305 வழக்குகள்'