டெல்லி: பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 4ஆம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதல் நெறி முறைகளில் தெரிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது;
- பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.
- உணவகங்கள் மதுபானக் கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
- பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது. திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம். இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
- உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.
- மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி. பேருந்துகள் இயக்குவதை மாநில அரசுகள் முடிவு செய்யும்
- அத்தியாவசியத் தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வரக் கூடாது.
- திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம். தகுந்த இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
- மாநில அரசுகள் அனுமதி அளித்தால் சிவப்பு மண்டலங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கலாம்.
- நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
- அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை.
- உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நீட்டிப்பு; டோர் டெலிவரி செய்ய அனுமதி.
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு.
- பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி. இவ்வாறு தளர்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.