இந்தியா - சீன எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேரந்த பழனி என்ற வீரரும் மரணமடைந்துள்ளார்.
இந்த 20 வீரர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பிரதானுக்கு உடன்பிறந்தவர் மூவர் உள்ளனர். பிரதானின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை அவருடைய சொந்த ஊரில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு வீரர் நாதுராம் சோரன் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். நாதுராம் சோரன் 1996ஆம் ஆண்டு பிகார் ரெஜிமெண்டில் பணியில் சேர்ந்தவர்.
இதையும் படிங்க: எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் ஊர் விவரங்கள்