பரஸ்பரம் நம்பிக்கைக்கான ஒரு தளத்தை கட்டமைக்கும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) சந்திப்பை, தங்களது பிரச்னைகளை களைவதற்கு இந்தியா, சீன நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான அதிகரிக்கும் பதற்றம் ஆகியவற்றுக்கு இடையே மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா பங்கெடுப்பது அதிக நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
நாடுகளுக்கு இடையே பொதுவான ஒரு தளத்தை கண்டறியவும், பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புகளை விரிவாக்கவுமான ஒரு பொதுவான தளத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தருகிறது.
தமது அண்டை நாடுகளுடன் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் போக்கை எதிர்கொள்ளும் நிலையில் சர்வதேச நலன்கள் மற்றும் இந்தியாவின் பிராந்திய மற்றும் சர்வதேச நலன்களுக்கான கூட்டமாக இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தங்களின் பிரச்னைகள் தீர்த்துக் கொள்ளும் தளமாக இந்தியா-சீன நாடுகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமா?
பாதுகாப்பு அபாயங்களுக்கான ஆசியாவின் இயக்குநர் ராகுல் போன்ஸ்லேவுடன் ஈடிவி பாரத் தரப்பில் பேசும்போது, “பரஸ்பர உறவுகளுக்கான சந்திப்புக்கான தளமாக இந்த வாய்ப்பை அளிப்பதற்கு அப்பால், பரஸ்பர நல்லுறவு விஷயங்களை விவாதிக்கக் கூடாது என்ற கொள்கையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விட்டுக்கொடுக்காதபட்சத்தில், இந்தியா-சீனா இடையேயான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான மேலும் முக்கியத்துவம் கொண்டதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இருந்தது என்பதை நிரூபிக்க முடியாது. என்ன நடக்கிறது என்றால், அனைத்து சர்ச்சைகளும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவது தவிர்க்கப்படுகின்றது” என்றார்.
“எனினும், இருதரப்பு சந்திப்புக்கு இடையே ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பிற்கு இடையே கிடைக்கும் வாய்ப்பை இந்தியா-சீனா இரு நாடுகளும் நழுவ விடக்கூடாது.
காலம் வேகமாக நகர்ந்து வரும் நிலையில் ஜெய்சங்கர்-வாங் யீ இருவரும் எல்லையில் தீவிரத்தன்மையை தணிப்பதற்கான ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இருபுறமும் வெளியுறவுக் கொள்கை வடிவத்தில் தீவிர தேசபக்தி கட்டமைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக செவ்வாய்கிழமையன்று, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் ரஷ்ய துணை தலைமை தூதர் ரோமன் பாபுஸ்கின் கூறுகையில், எல்லை கட்டுப்பாடு கோடு குறித்த பிரச்னையில் இந்தியா-சீனா இடையே தீர்வு ஏற்படுவதை ரஷ்யா ஊக்குவிக்கும் ஆனால், அதே நேரத்தில் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடமாட்டோம் என்று கூறி இருக்கிறார்.
உறுப்பினர் நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கைகளை கட்டமைக்கும் ஒரு தளத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "தவிர இரண்டு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை மற்றும் தீவிரமான சூழலை குறைக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கான தூண்டுதலை அளிக்கும் வகையிலான ஒரு சாதகமான சூழலையை ரஷ்யா ஊக்குவிக்கும்
இந்தியா-சீனா இரு நாடுகளும் கொந்தளிப்பான சூழலைத் தவிர்க்கும் வகையில் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தனிப்பட்டமுறையில் ஒரு மென்மையான அழுத்தத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர் நாடுகள் கொடுக்கும்.
இந்த சந்திப்பு சாதகமான சூழலைத் தருவதாக இருக்கும் என்று ரஷ்ய துணை தலைமை தூதர் ரோமன் பாபுஸ்கின் இந்தப் பொருளில்தான் சொல்லியிருக்கிறார்,” என்று போன்ஸ்லே சுட்டிக்காட்டுகிறார்.
“இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இதர உறுப்பினர் நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவும் நிச்சயமாக முயற்சிக்கும். எனினும் ஜெய்சங்கர் மற்றும் ஷா முகமது குரேஷி இடையேயான சந்திப்பு மாஸ்கோவில் சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தின் இடையே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்து எல்லையில் இருதரப்பு பிரச்னைகள் குறித்து பேசினார்.
லடாக் எல்லை பதற்றம் காரணமாக இருதரப்பு ராணுவத்தினரிடையே மீண்டும் மோதல் போக்கு தொடங்கிய சில நாள்களிலேயே மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பின் இடையே சீனாவின் யாங் யீ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு நடைபெறுமா என்பதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இன்று ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா-சீனா இடையேயான இப்போதைய மோதல் போக்கு தொடங்கியதற்கு பின்னர், மாஸ்கோவில் நடைபெறும் இந்த சத்திப்பின் இடையேதான் இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அரசியல் ரீதியாக முதன்முதலாக நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள உள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டுதான் இந்தியா இணைந்தது. இந்த அமைப்பில் ஏற்கனவே சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ரஷ்யாவின் ஆதரவுடன் இந்தியா இதில் இடம் பெற்றிருக்கிறது.
“இந்தியாவின் பல்வேறு நலன்களுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்படுகிறது. இந்த பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் தூரதர ரீதியிலான பன்முக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சர்வதே வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதை மற்றும் சபாஹர் துறைமுகம் உள்ளிட்ட சில முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுடன் இந்தியாவின் நலன்களோடு தொடர்புடைய முக்கிய பகுதியாக, யூராசியா நாடுகளுடன் முழுமையாக இந்தியா தொடர்பு கொள்வதற்கு ஒரு தளத்தை இது கொடுக்கிறது” என்று போன்ஸ்லே கூறினார்.
ஆஃப்கானிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் இந்தியாவின் நலன்கள் வலுப்பெற்றுவதற்கு இடையே இந்த சந்திப்பு இருதரப்பு ஈடுபாட்டுக்கான பலதரப்பு தளத்தை அளிக்கிறது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.
இதுவரையிலும், இந்த அமைப்பில் (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) சீனா பெரும் பங்கு வகித்து வந்த நிலையில் அதற்கு சமமான பலம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் செயல்பாடுகள் இருக்கும். இறுதியாக, இந்த அமைப்பு, சீர்திருத்தத்துடன் கூடிய பன்முக கொள்கைக்கான தளத்தை இந்தியாவுக்கு கொடுக்கும்.
தவிர, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசும் நிகழ்வுக்கான அடித்தளத்தை அளிக்கும் வகையில் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு இருக்கும்.
ஐநா-வின் 75ஆவது ஆண்டின் பொருளில் பிராந்திய விஷயங்கள், முக்கியமான சர்வதேச விவகாரங்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனை செய்வார்கள்.
சில அதிமுக்கியத்துவம் வாய்ந்த வெளியவுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்கள், அதே போல கோவிட் 19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சமூக பொருளாதார அரசியல் ரீதியான தாக்கங்களில் இருந்து மீளும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல்பாடுகளை மேலும் அதிகரிப்பது ஆகியவற்றை மையப்படுத்தியே ஆலோசனைகள் இருக்கும். வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் புதன்கிழமையன்று ரஷ்ய அதிபர் வால்டிமர் புதின் பேசியிருக்கிறார்.