ETV Bharat / bharat

'இந்திய-சீன பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது' - ரஷ்யா

இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்னையைத் தீரக்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா
ரஷ்யா
author img

By

Published : Jun 23, 2020, 10:52 PM IST

இந்திய, சீன, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை (ஆர்.ஐ.சி.) இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில், மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, இந்திய, சீன நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்னையைத் தீரக்க மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது என தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "பிரச்னைகளைத் தீர்க்க இரு நாடுகளும் அமைதியான வழியைத் தேர்ந்தெடுக்கும் என்பதில் ரஷ்யாவுக்கு நம்பிக்கை உள்ளது. இதில், மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது. குறிப்பாக, இம்மாதிரியான பிரச்னைகளில் அவர்களுக்கு உதவி தேவைப்படாது என நினைக்கிறேன. அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். ராணுவ ரீதியாக உயர்மட்ட அலுவலர்களும் அரசியல் ரீதியாக வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

ராணுவத்தைப் பயன்படுத்தி பிரச்னையைத் தீர்க்கலாம் என இரு நாடுகளும் நினைக்கவில்லை" என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்: எஸ்-400 ஏவுகணையை விரைந்து கைப்பற்றுமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.