நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி இந்திய பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் தலைமைத் தாங்கி கொடியேற்றிய எல்லைப் பாதுகாப்பு படை டி.ஜி. எஸ்.எஸ்.தேஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியா அமைதியை விரும்பும் தேசம் எனவும், அதேவேளை நாட்டு மக்களின் பாதுகாப்பு, தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்க வீரர்கள் என்றும் தயார் நிலையில் உள்ளனர். இந்திய நாட்டின் எல்லைகளை முழு பாதுகாப்புடன் உள்ளன. வீரர்கள் எப்போதும் உஷார் நிலையில் இருக்கிறார்கள் என, உறுதிபடத் தெரிவித்தார் தேஸ்வால்.
முன்னதாக, பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்திரைச் சந்தித்து கலந்துரையாடிய தேஸ்வால், அவர்கள் தியாகத்தைப் பாராட்டி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: சீனாவை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுகிறது - ராகுல் காந்தி