கடந்த அக்டோபர் 24ஆம் தேதி சவூதி அரேபிய அரசு வெளியிட்ட புதிய 20 ரியால் வங்கி நோட்டில், உலக வரைபடம் இடம்பெற்றுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்பதுபோல தவறான வரைபடம் இடம் பெற்றுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், "இந்தத் தவறை உடனடியாக திருத்தும்படி சவுதி அரேபியா அரசுக்கு தெரிவித்துள்ளோம். ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிராந்தியங்கள் ஆகும். இதற்கு உடனடியாக தீர்வு காண டெல்லி மற்றும் ரியாதில் உள்ள சவுதி அரேபியா தூதர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.