ETV Bharat / bharat

சீனாவை எதிர்கொள்வதில் இந்தியா-அமெரிக்கா தெளிவான கண்ணோட்டத்தில் உள்ளது: மைக் பாம்பியோ

author img

By

Published : Oct 27, 2020, 5:34 PM IST

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா கூட்டுறவுடன் செயல்பட முடிவெடுத்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

அமெரிக்க-இந்திய வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையிலான 2+2 மூன்றாம் கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இரு தரப்பினருக்கும் இடையில் புவி-இடஞ்சார்ந்த ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு (BECA) ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் இரு தரப்பினரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையே ராணுவக் கூட்டுறவு சிறப்பான நிலையில் உள்ளன. இரு நாட்டு உறவையும் தாண்டி நட்பு நாடுகள், மூன்றாம் உலக நாடுகளுடன் இணைந்து ராணுவ ஒருங்கிணைப்பை மேற்கொள்ள இந்தியா-அமெரிக்கா தயாராக உள்ளன என்றார்.

பின்னர் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை நிலைநாட்ட உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது எனவும் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளன எனக் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் பேசுகையில், உலக நாடுகள் பெருந்தொற்று சவாலை எதிர்கொண்டுவரும் இந்த சூழலில் உலக அமைதிக்காக இரு முக்கிய நாடுகள் இணைந்து பணியாற்றவுள்ளன. இரு நாட்டு ஒற்றுமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேவையான சூழலில் உள்ளது என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இருக்க அமெரிக்கா விரும்புகிறது. கல்வான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினோம். இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தயாராகவுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசாக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு உருவெடுத்துள்ள நிலையில், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா தயாராக உள்ளன எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: படையெடுப்பாளர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே நாம் பேச வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.