அமெரிக்காவின் துணைச்செயலாளர் ஸ்டீபன் பீகன் தொடங்கிவைத்த தொலைபேசி மாநாட்டில் வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ஹர்ஷ் ஸ்ரீரிங்க்ளா பங்கேற்றார். அமெரிக்கா வழிநடத்திய இந்த வீடியோ மாநாட்டில் கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ளும் வழிகளை விவாதிக்க ஒரு ஒருங்கிணைந்த இந்தோ-பசிபிக் முன்முயற்சியாக, ஆஸ்திரேலியா, கொரியக் குடியரசு, வியட்நாம், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கோவிட்-19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலவரம் குறித்த மதிப்பீடுகள் மற்றும் பரவலை தடுக்க மேற்கொள்ளப்படும் பிராந்திய மற்றும் உலகளாவிய முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வழிகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுவதன்படி “பிரதமரின் தலைமையின் கீழ், தேசிய அளவிலும், பிராந்திய ரீதியாகவும் இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ஹர்ஷ் ஸ்ரீரிங்க்ளா சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தனது முன்னோக்கு பார்வைகளை கூட்டாளி நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும், இந்த சவாலை எதிர்கொள்ள இணைந்து செயல்படவும் இந்தியாவிற்கு இருக்கும் விருப்பத்தை அவர் வெளிப்படித்தினார்” இந்த தொலைபேசி மாநாடு ஒவ்வொரு வாரமும் நடைபெற உள்ளது.
இதில் தடுப்புமருந்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு, வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்ற குடிமக்களின் அரை கூவல், உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவி புரிவது, உலகப்பொருளாதாரத்தின் மேல் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்துவது போன்ற சிக்கல்கள் விவாதிக்கப்படும்.
இதே நாளில், கோவிட்-19 பற்றி சீனாவின் வழிநடத்தலில் நடைபெற்ற தொலைபேசி மாநாட்டில் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அலுவலர்கள் பங்குபெற்றுள்ளனர். தொற்றுநோயின் மைய்யப்பகுதியான வூஹான் மாகாணத்தில் எந்த ஒரு புதிய கொரோனா பாதிப்பும் வரவில்லை என சீனா இந்த வாரம் அறிவித்து, உலகம் முழுவதும் மக்களிடையே நம்பிக்கையை பரவச்செய்துள்ளது.
தெற்கு ஆசியா நாடுகளின் முதன்மை அரசாங்க தலைவர்கள் பங்குபெற்று மார்ச் 15 நடைபெற்ற வீடியோ மாநாட்டில் சில திட்டங்கள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டன. (பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு தூதராக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார்).
இவற்றை முன்னெடுத்துச்செல்வதில், இந்திய பணிக்குழுவுடன் சேர்ந்து வெளியுறவு அமைச்சக செயலாளர் ஹர்ஷ் ஸ்ரீரிங்க்ளா ஒரு முக்கிய தொடர்பாக தனது சக SAARC பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார். ஆரம்ப பங்களிப்பாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு கொரோனா தொற்றுநோய்க்கான ஒரு நிதியை உருவாக்க இந்தியா முன்வந்துள்ளது.
இதுபோக, மாலத்தீவு மற்றும் இரானிலிருந்து வந்த வேண்டுகோள்களைப்போல், அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க உதவிபுரிய விரைவு மருத்துவ குழுக்களை உருவாக்கியுள்ளது.
இதுபோலவே மார்ச் 17 அன்று, பிரதமர் மோடி சவுதி அரேபிய முடியரசின் மூத்த இளவரசர், முஹம்மத் பின் சல்மானை அழைத்து ஒரு இணையவழி G20 உச்சிமாநாட்டை ஒருங்கிணைக்க வலியுறுத்தினார்.
இந்த இணைய மாநாடு கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராட பயன்படக்கூடிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை உலகளாவிய அளவில் விவாதிக்கும். G20-யின் தற்போதைய தலைமை இருக்கையாக சவுதி அரேபியா இருக்கிறது. 2022-இல் இந்தியா G20 உச்சிமாநாட்டின் தலைமை இருக்கையாக செயல்பட்டு கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை தணிக்கும் வகையில், அவசியம் என்று கருதப்படுகின்ற எந்த வகையிலும் சர்வதேச நிறுவனங்கள் உடன்சேர்ந்து G20 செயல்படும்.
G20 தலைவர்கள் மக்களை காக்கவும், உலகப்பொருளாதாரத்தை காக்கவும் ஒருங்கிணைந்த கொள்கைகளை முன்வைப்பார்கள்” சவுதி தலைமையில் நடைபெற்ற G20 மாநாட்டின் பிறகு ரியாத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“இந்த உச்சிமாநாடு G20 பொருளாதார அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த சுகாதார, வர்த்தக மற்றும் வெளியுறவு துறைகளின் அலுவலர்கள் ஆகியோரின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, இன்னும் துல்லியமாக தேவைகளை கணித்து தக்க செயல்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறது” என்று தெரிவிக்கட்டுள்ளது.
உலகளவில் இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மனித மற்றும் பொருளாதார சேதங்களை பற்றி இன்னும் சில நாள்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் கூட்டம் குறித்து இவ்வாறு இந்த அறிக்கையில் சேர்த்து கூறப்பட்டுள்ளது.