தெலங்கானாமாநிலத்தில் உள்ள சைதன்யாபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 1.8 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காரில் கொண்டு சென்ற அந்த நபரை சைதன்யாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் மற்றோரு இடத்தில் 4 நபர்கள் இதேபோல் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.14.60 லட்சம் ரொக்கம்உட்பட 286 கிராம் தங்கத்தை பேகும் பஜார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக ரூ.2.8 கோடி மதிப்புள்ளபணம் மற்றும் தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கையகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்படதக்கது.