ETV Bharat / bharat

பிகார் தேர்தலுக்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் அளிக்கவில்லையா? - பீகார் தேர்தல் ராகுல் பரப்புரை

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்காமல் உள்ளார்.

பீகார் தேர்தலுக்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் அளிக்கவில்லையா?

author img

By

Published : Oct 23, 2020, 10:39 AM IST

பிகார் மாநிலத்திற்கான சட்டப்பேரவை ஆர்ஜேடி 144 தொகுகளிலும், காங்கிரஸ் 70, சிபிஐ (எம்-எல்) க்கு 19, சிபிஐ (6), சிபிஎம் (4) தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த மெகா கூட்டணிக்கு ஆர்ஜேடியின் தேஜாஷ்வி யாதவ் தலைமை தாங்குகிறார்.

தேர்தல் பரப்புரையில் பாஜக, ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் பேரணிகளில் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்னும் தனது தேர்தல் பரப்புரையை பிகாரில் தொடங்காமல் இருப்பது அரசியல் நோக்கர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று பிகார் மாநிலம் நவாடாவில் உள்ள ஹிசுவா மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஹல்கான் ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.

ஆர்ஜேடியின் 15 ஆண்டுகால ஆட்சியில் முக்கிய பங்கை வகித்த காங்கிரஸ், தற்போது தேர்தல் பரப்புரை மூலம், மெகா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தருவது ராகுல் காந்தியின் கடமை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ராகுல் காந்தி இல்லாத நிலையில், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ்தான் தற்போது முன்னணியில் இருந்து தேர்தல் பரப்புரை செய்துவருகிறார்.

கட்சி வட்டாரங்களின்படி, யாதவ் தனது பேரணிகளின்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய எதிர்ப்புள்ளதாக ஆர்ஜேடி கருதுகிறது.

பிகார் தேர்தல் களத்தில், ராகுல் காந்தியைவிட ஆர்ஜேடி தலைவர் தேஜஷ்வி யாதவுக்கு அதிக தேவை உள்ளதாக தெரிகிறது. அவர் கடந்த ஒரு வாரத்தில் 70க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றியுள்ளார். ராகுல் காந்தி எங்கு பரப்புரை மேற்கொண்டாலும் அந்த வேட்பாளருக்கு தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்காது என்ற மூடநம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

"இந்த தர்க்கத்துடன் நான் உடன்படவில்லை, ஏனென்றால் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. கட்சியின் முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட நேரத்தில் மட்டுமே மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார்கள்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரேம்சந்த் மிஸ்ரா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மெகா கூட்டணியில், ஆர்ஜேடி முன்னிலை வகிக்கிறது, அது வெளிப்படையான விஷயம். அவர் முதல்வரின் முகம், ஆதனால் அவரே முன்னால் நின்று தேர்தல் களத்தை வழிநடத்த வேண்டும்.

ஒவ்வொரு வாக்குப்பதிவு கட்டத்திற்கும் முன்னர் அனைத்து மத்திய தலைவர்களின் இரண்டு பொதுக் கூட்டங்களை நடத்த நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிடுவது மாநிலத் தலைவர்களே, ராகுல் காந்தி அல்ல, இதனால், தேர்தலுக்காக பிகார் மாநிலத்தில் ராகுல் காந்தி முகாமிடுவது அவசியமில்லை” என்றார்.

நரேந்திர மோடி 12 பேரணியில் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் நிலையில், ராகுல் காந்தி வெறும் ஆறு பொதுக் கூட்டங்களில் மட்டுமே உரையாற்றுகிறார். பிரதமர் தனது பேரணியை பாகல்பூரிலிருந்து இன்று தொடங்குகிறார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் ஒற்றுமையை காட்டும் விதமாக தேஜஷ்வியும் ராகுலும் அக்டோபர் 28 ஆம் தேதி நவாடாவின் ஹிசுவாவில் கூட்டு பேரணியை நடத்துகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.