உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்துத் துறை இன்று ஏற்பாடு செய்திருந்தது. எய்ட்ஸ் மாற்றத்திற்கு சமுதாய பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் மாவட்ட நீதிபதி சோபனா தேவி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு எச்ஐவி தடுப்பு சட்டம் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள் வாழ்வதற்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.
இதில் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் எச்ஐவி உடன் வாழ்பவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் குளூனி பள்ளி சமூக சேவை டிரஸ்ட் சார்பிலும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க..' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது ' - கே.எஸ். அழகிரி