அரபிக் கடலில் நேற்றிரவு உருவாகிவுள்ள புயலுக்கு 'க்யார்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிரமான புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால் தென் கொங்கன், தென் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா பகுதிகளில் கனமழை முதல் மிக அதிகமான கனமழைவரை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக கடலோரத்தை ஒட்டியுள்ள தக்ஷின பகுதியில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய செய்திகள்: