ETV Bharat / bharat

முதலமைச்சர் இல்லாமல் நடைபெற்ற அவர் தந்தையின் இறுதிச் சடங்கு

author img

By

Published : Apr 21, 2020, 1:53 PM IST

மறைந்த ஆனந்த் சிங் பிஷ்ட் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. கரோனா தடுப்பு பணிகள் இருப்பதால் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மாட்டேன் என யோகி ஆதித்யநாத் முன்னர் அறிவித்திருந்தார்.

In Adityanath's absence
In Adityanath's absence

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவந்த நிலையில் நேற்று காலை 10.44 மணிக்கு காலமானார்.

கரோனா தடுப்பு பணிகள் இருப்பதால் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப் போவதில்லை என யோகி ஆதித்யநாத் நேற்று அறிவித்திருந்தார். மேலும் ஊரடங்கு விதிகளை முறையாகப் பின்பற்றி 20 நபர்களுக்கு மிகாமல் தன் தந்தையின் இறுதிச் சடங்கை நடத்தி முடிக்க அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆனந்த் சிங் பிஷ்டின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் உள்பட குறைவான சிலரே இதில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:’கரோனா பணிதான் முக்கியம்; தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.