ETV Bharat / bharat

குதிரைக்கு வந்த சோதனை... சிவப்பு மண்டலத்திலிருந்து வந்ததால் ‘ஹோம் குவாரண்டைன்’

வீட்டில் தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தை கரோனாவால் பிரபலமாகியுள்ளது. இதுவரை மனிதர்களைதான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக சிவப்பு மண்டல பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

horse under home quarantine
horse under home quarantine
author img

By

Published : May 28, 2020, 3:47 PM IST

ராஜௌரி (ஜம்மு & காஷ்மீர்): மனிதர்களை அடுத்து சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து வந்த குதிரையை அரசு அலுவலர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கோவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இங்கிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இச்சூழலில், ஜம்முவிற்குள் ராஜௌரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்தபடி ராஜௌரிக்கு வந்துள்ளார். இவர் அலுவலர்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது.

மீட்கச் சென்ற வனத்துறையினரை தாக்கிய சிறுத்தை: பதறவைக்கும் வீடியோ

மே 25ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு குதிரையில் புறப்பட்ட அவர், முகல் சாலை வழியாக ராஜௌரியை வந்தடைந்துள்ளார். கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்ட நிலையில், எந்த வாகன தொந்தரவும் இல்லாமல் குதிரையில் சவாரி செய்துள்ளார்.

பச்சை மண்டலமான ராஜௌரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி குதிரையையும், அதன் உரிமையாளரையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் முடிவு வரும் வரை உரிமையாளர், கரோனா சிறப்பு தனிமைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வரும் வரை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையை தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென, அதன் உரிமையாளரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீருக்கு 2ஜி சேவை மட்டுமே!

இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்டு, லாடத்தில் தனியாக கட்டி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குதிரை, தற்போது தனது உணவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.