ETV Bharat / bharat

கேரளாவில் ‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் செல்ஃபோன் மூலம் மருத்துவ ஆலோசனைப் பெற ‘கூடே’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 24, 2020, 3:51 PM IST

‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்
‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் முதல்முறையாக மல்டி ஸ்பெஷாலிட்டி டெலி மெடிசன் வசதி தொடங்கப்பட்டுள்ளது. கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைமையில், பல்வேறு மருத்துவ சிறப்புத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு ‘கூடே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 'கூடே' டெலிமெடிசன் சேவையின் சுவரொட்டியை வயநாடு மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா வெளியிட்டார். நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வீட்டிலிருந்தபடியே இந்த ’கூடே’ சேவையை பயன்படுத்தி மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம்

இச்சேவையின் மூலம் தொடர்ச்சியாக மருத்துவர்களை சந்திப்பவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் செல்போன் அழைப்பு மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான மருந்து சீட்டு வாட்ஸ் அப், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.மேலும், அருகிலுள்ள மருந்தகத்தில் இந்த மருந்து சீட்டைப் பயன்படுத்தி மருந்துகளை மக்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: 'ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.