ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் விளையும் மிளகாய் அதன் தனித்துவமான சுவைக்காக சர்வதேச அளவில் புகழ் பெற்றது.
முன்னதாக, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள் உலர்ந்த மிளகாயை சாலை வழியாக வங்கதேசம் நாட்டுக்கு சிறிய அளவில் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
தற்போது லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை சாலை வழியாக அனுப்ப முடியாமல் தவித்து கொண்டிருந்துள்ளனர்.
இச்சமயத்தில்தான் ரயில்வே அலுவலர்கள் வியாபாரிகளை சந்தித்து ரயில் போக்குவரத்து குறித்து விளக்கியுள்ளனர்.
சரக்கு ரயிலில் ஒரு பயணத்தில் குறைந்தது 1500 டன் அனுப்ப வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 500 டன் எடை அடங்கிய சிறப்பு பார்சல் ரயிலை வங்களா தேசத்திற்கு அனுப்ப முடிவு செய்தனர்.
அதன்படி, இந்திய ரயில்வே துறையில் முதன்முறையாக ஆந்திராவிலிருந்து புறப்பட்ட 16 பார்சல் வேன்களைக் கொண்ட ஒரு சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்தின் பெனாபோலை வெற்றிகமாக அடைந்துள்ளது.
ஒவ்வொரு பார்சல் வேனிலும் 466 உலர் மிளகாய் பைகள் ஏற்றப்பட்டுள்ளன. சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் மூலம் மொத்த எடை 384 டன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் மூலம் எடுத்துச் செல்ல ஒரு டன்னுக்கு ரூ.4,608 மட்டுமே ஆகியுள்ளது. அதே சமயம், சாலை போக்குவரத்து மூலம் அனுப்பியிருந்தால் ஒரு டன்னுக்கு ரூ.7 ஆயிரம் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனாவை விரட்டிய குடும்பம்: குணமடைந்த 106 வயதான நபர் உள்பட 11 பேர்!